Saturday, 27 April 2013

அறிமுகம்


தமிழ்நாடு தேர்வாணயம் நடத்தும் போட்டித்தேர்வு பாட குறிப்புகள் மற்றும் வினா விடைகளைத் தங்களோடு பகிர்ந்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். முயற்சி திரு வினையாக்கும் என்பது முது மொழி அதற்கிணங்க, நம்முடைய முயற்சியின் வாயிலாக அரசாங்க பணி நமக்கும் சித்திக்கும் என்பதில் உறுதியாய் இருந்து தொடர் முயற்சி செய்வோம்.


எட்டு எட்டாக நான்கு எட்டு வைத்தால் எவெரஸ்ட் சிகரத்தையும் எட்டி பிடித்து விடலாம். இதில் ஒளிந்துகிடக்கிறது எவெரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 கி.மீ
தொடர்பு படுத்தி படிப்பதின் மூலமும், படித்த குறிப்புகளை குறித்து சிந்தித்து மீண்டும் நினைவுப்படுத்துவதன் மூலமும் நாம் பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.

தேர்வு நேரத்தில் கிட்ட பார்வைக்கு குவியா குழியா என்று சந்தேகம் வந்துவிடும். பதில் எது இதுவா? அல்லது அதுவா?. இரண்டுமே சரியான பதிலாக தோன்றி சிக்கலை உண்டு பண்ணும். அது போன்ற வினாக்களுக்கு நினைவு தூண்டுதலாக கீ வேர்ட்சை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு கிட்ட குழி வெட்டி தூர குவி இந்த வாக்கியத்தில் கிட்ட பார்வைக்கு குழி லென்ஸ் எனவும் தூரப்பார்வைக்கு குவி லென்ஸ் எனவும் எளிதில் நினைவுப்படுத்தலாம்.

மீண்டும் அடுத்த பதிவுகளில் சந்திப்போம். என் தொடர் பதிவுகள் தங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.





2 comments:

  1. நல்ல முயற்சி!
    சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இதுபோன்று வேறொரு பொருளுடன் தொடர்புபடுத்தி நினைவுகொள்ளுதல் என்பது மிகச்சிறந்ததொரு நினைவாற்றல் வழிமுறையாகும். தொடருங்கள் உங்கள் சேவையை.

    ReplyDelete