Showing posts with label உங்களுடன். Show all posts
Showing posts with label உங்களுடன். Show all posts

Tuesday, 1 October 2019

முயற்சி என்பது சொல் அல்ல செயல்

முயற்சி என்பது சொல் அல்ல செயல்...

இந்த வாக்கியத்தை படிச்சதுமே புரிஞ்சுட்டு இருக்கும்,  அது என்னன்னா, நான் அரசு அதிகாரியா ஆயிடுவேன்னு சொல்லிட்டு இருக்கறது முயற்சி இல்ல, அரசு அதிகாரியா ஆகுறதுக்கு செயல் படனும்.

நான் அரசு அதிகாரியா ஆகுறேன்னு சொல்லிட்டு, ஆர் ஓ மெஷின் விக்குறதுல முனைப்பா இருந்தீங்கன்னா நீங்க தொழில் அதிபராத்தான் ஆக முடியும்.

எந்த ஒரு விஷயத்துக்குமே அதற்கு உண்டான நேரத்தை கொடுக்கனும் அது ரொம்ப முக்கியம்.

அதை விட முக்கியம்  உங்கள் செயல்பாடுகள் உங்கள் இலட்சியத்திற்கான பாதையை நோக்கி போகனும்.

group 2 & group 2A பாடத்திட்டம் மாத்தியிருக்காங்க

pdf அட்டாச் பண்றேன் படிங்க..

ஆல் த பெஸ்ட் எனக்கும் சேர்த்து

Sunday, 29 September 2019

உங்களால் முடியும் என்று நீங்கள் நம்பினால்!

     நம்முடைய எண்ணம் தான் நம்முடைய வாழ்க்கையாகிறது. அதாவது நாம் எண்ணுகிற அனைத்து எண்ணங்களும் அல்ல, நாம் கவனத்தோடு எந்த எண்ணத்தை தொடர்ந்து எண்ணுகிறோமா அது வாழ்க்க்கை ஆகிவிடும்.

"You Can Do It if You Believe You Can!"
உங்களால முடியும்ன்னு நீங்க நம்பினீங்கனா அதை செஞ்சு முடிக்க உங்களால முடியும். அது அரசாங்க வேலையா இருந்தாலும் சரி, ஆணி பிடுங்கற வேலையா இருந்தாலும் சரி, உங்களோட நம்பிக்கை தான் உங்க வாழ்க்கை.

மத்தவங்க சொல்வாங்க, உன்னால முடியுமா? எவ்ளோ படிக்க வேண்டியிருக்கு, உனக்கு இங்லீஷ் நாலெட்ஜ் இருக்கா? பெரிய வேலைக்கு போகனும்ன்னா ஒரு வேளை நீங்க ஒரு கலெக்டர் ஆக ஆசைப்பட்டீங்கன்னனா, உன்னால அதை புரிஞ்சுக்க முடியுமா? உன்னால எழுத முடியுமா? உனக்கு அந்த அளவுக்கு அறிவு இருக்கா? இப்படி நெறய டிஸ்கரேஜ், பண்ண யாராச்சும் வந்துட்டே இருப்பாங்க, அதை உங்க கவனத்துக்கு கொண்டு போகாதீங்க

பிறகு!

நீங்க நம்பனும், உங்களால முடியும்ன்னு

நீங்க யோசிக்கனும், எப்படி முடிக்கலாம்ன்னு,

நீங்க திட்டம் போடனும்

நீங்க போடுற திட்டத்தை சிறு சிறு பகுதியா பிரிச்சுக்கனும்

பிரிச்சுட்டு உட்கார்ந்து சாம்பிராணி போடக் கூடாது படிக்கத் துவங்கனும்...

நான் எழுதறது உங்களுக்காக மட்டும் இல்லைங்க எனக்காகவும் தான்.

Tuesday, 25 June 2019

உங்களால் முடியும்!

ஒவ்வொரு உன்னதமான பணியும் முதல் யோசனையில் சாத்தியமற்றதே!

- தாமஸ் கார்லைல்


கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்னாடி நான் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துல அரசு வேலை வேணும்ன்னு மனு கொடுத்தேன். அப்போ கலெக்டரா இருந்தது திருமதி.கண்ணகி. நான் மனு கொடுத்த நேரம் அவங்க ஆபிசுக்கு வரல, அவங்களுக்கு பதிலா, பொறுப்புல வேறொருத்தர், அவர் பேர் எனக்கு நினைவு இல்ல.

Wednesday, 30 January 2019

உங்களால் வெல்ல முடியும்.


நீங்கள் வெல்ல முடியும் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களால் வெல்ல முடியும்; வெற்றிக்கு அவசியம் நம்பிக்கையே.

                                  -   வில்லியம் ஹாஸ்லிட் 

நம்ம பாதிக்கிற முதல் விஷயமே, நம்ம சுத்தி இருக்கறவங்களோட பேச்சுதான். ஒன்னு அவங்க நம்ம மனசுல நம்பிக்கையை விதைப்பாங்க.. இல்லென்னா அவநம்பிக்கையை விதைப்பாங்க..

வெற்றியை மாத்திரம் எதிர்பாருங்கள்

அன்பானவர்களே!

கடந்த பதிவல் வெற்றியை மாத்திரம் எதிர்பாருங்கள் என்று எழுதியிருந்தேன். ஆம் வெற்றியை மாத்திரமே எதிர்பாருங்கள்.

தோல்வி குறித்த எண்ணம் எப்பொதுமே வராது இருக்கப் போவதே இல்லை. அது வரும். நாம் பயப்படுவோம். சோர்ந்துபோவோம். அல்லது நாம் பயப்படாவிட்டாலும் வேறு யாரேனும் நம்மை பயப்படச் செய்வார்கள்.

உங்கள் நண்பர்கள், உங்கள் உறவினர்கள், அல்லது நீங்கள் பெருமதிப்பும் பேரன்பும் வைத்திருக்கும் யாரேனும் ஒருவர் கூட இந்த காரியத்தை செய்யலாம்.

எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருங்கள். உங்களுக்குள்ளாக நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதையும் கவனித்துப் பாருங்கள்.

அரசு தேர்வில் வெற்றிப் பெற முடியாது என்ற எண்ணம் வரும் போதெல்லாம் அதை மாற்றிப் பழகுங்கள்.

என்னால் இந்த தேர்வில் வெற்றிப் பெற முடியும்.

சமீபத்தில் என் மகள் என்னிடம் கூறினாள் அம்மா உங்களுக்கு என்று சக்தி எதுவும் இல்லை.

ஒரு தனி சிறப்பு மிக்க, இந்த பிரபஞ்சத்தை இயக்கக் கூடிய சக்தி எதுவும் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம். நம்மை இயக்கக் கூடிய சக்தி நம்மிடம் இருக்கிறது.

அது என்ன வென்றால் எண்ணம்.

நீங்கள் எதை நினைத்தாலும் அது சரியே..

நீங்கள்  உங்களால் முடியாது என்று நினைத்தால் உங்களால் முடியாது தான்.

உங்களால் முடியும் என்று நினைத்தால், உங்களால் முடியும் தான்.

முடியாது என்று எண்ணும் போது... சோர்ந்து போய் செயல்படாமல் இருப்பீர்கள்.

முடியும் என்று எண்ணும் போது, செயல்பட துவங்குவீர்கள்.

தொடர்ந்து ஒரு காரியத்தில் செயல்படுதல் நிச்சயம் வெற்றி தரும்.

முடியும் என்று எண்ணிப்பழகுங்கள்

Friday, 14 September 2018

உறுதியான நம்பிக்கையை உருவாக்குங்கள்

அன்பானவர்களே!

உங்கள் தேர்வு அரசுப் பணி என்று முடிவு செய்துவிட்டீர்கள்.

அடுத்து அதைப் பற்றி கனவு காணுங்கள் என்று நிச்சயமாக நான் சொல்லப்போவதில்லை.

இப்பொழுது நீங்கள் சுற்றுவட்டங்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.

Saturday, 27 April 2013

அறிமுகம்


தமிழ்நாடு தேர்வாணயம் நடத்தும் போட்டித்தேர்வு பாட குறிப்புகள் மற்றும் வினா விடைகளைத் தங்களோடு பகிர்ந்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். முயற்சி திரு வினையாக்கும் என்பது முது மொழி அதற்கிணங்க, நம்முடைய முயற்சியின் வாயிலாக அரசாங்க பணி நமக்கும் சித்திக்கும் என்பதில் உறுதியாய் இருந்து தொடர் முயற்சி செய்வோம்.