Saturday, 27 April 2013

பொதுத்தமிழ் - 1


சமச்சீர் கல்வி பாடநூல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

வாழ்த்து

  • மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து என துவங்கும் பாடலை பாடியவர்  மாணிக்கவாசகர். 
  • மெய்  உடல்
  • விதிர்விதிர்த்து  உடல் சிலிர்த்து
  • விரை  மணம்
  • நெகிழ  தளர
  • ததும்பி  பெருகி
  • கழல்  ஆண்கள் காலில் அணியும் அணிகலன் (இங்கு ஆகுபெயராய் இறைவனின் திருவடியைக் குறித்தது)
  • சயசய  வெல்க வெல்க

இலக்கணக்குறிப்பு

  • விடேன்  தன்மை ஒருமை வினைமுற்று

பகுபத உறுப்பிலக்கணம்

  • போற்றி  போற்று + இ. போற்று  பகுதி, இ வினையெச்ச விகுதி.

  • மாணிக்கவாசகர் சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர்.

  • மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்

  • திருவாதவூர் மதுரைக்கு அருகில் உள்ளது. 
  • மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர். 
  • மாணிக்கவாசகர் தலைமையமைச்சராக பணியாற்றிய மன்னரின் பெயர் அரிமர்த்தன பாண்டியன். 
  • பாண்டிய மன்னர் அரிமர்த்தன பாண்டியரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர் மாணிக்கவாசகர். 
  • பாண்டியனுக்காக குதிரை வாங்கச் சென்றவர் மாணிக்கவாசகர்

  • குதிரை வாங்க சென்றபொது திருப்பெறுந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பட்டவர் மாணிக்கவாசகர். 
  • திருப்பெறுந்துறை இறைவனை, மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுதவர் மாணிக்கவாசகர் 
  • அழுது அடியடைந்த அன்பர் மாணிக்கவாசகர் 
  • திருப்பெருந்துறை இறைவனை, மெய்யுருகப்பாடிக் கசிந்து கண்ணீர் மல்க தொழுததினால், அழுது அடியடைந்த அன்பர் என்று மாணிக்கவாசகர் அழைக்கப்படுகிறார்.

  • திருவாசகமும் திருக்கோவையாரும் மாணியக்கவாசகரால் அருளப்பட்டது.

  • மாணிக்கவாசகர் எழுப்பிய கோவில் தற்போது ஆவுடையார்கோவில் என்று அழைக்கப்படுகிறது. 
  • ஆவுடையார் கோவில் திருப்பெருந்துறையில் உள்ளது. 
  • மாணிக்கவாசகரின் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு. 
  • சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன. 
  • சைவத்திருமுறைகள் பன்னிரெண்டு 
  • சைவத்திமுறைகளில் எட்டாம்திருமுறையில் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன. 
  • திருவாசகத்தில் 658 பாடல்கள் இடம் பெற்றுள்ளது 
  • திருவாசகம் கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யும். 
  • திருவாசகம் கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யுமாதலால், திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் தொடர் வழங்கலாயிற்று. 
  • திருவாசகத்தின் சிறப்பை உணர்ந்த ஜி யு போப் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 
  • திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு போப் 
  • திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் முதற்பாடல் நம் பாடப்பகுதியாக அமைந்துள்ளது. 
  • திருவாசகத்தில் திரு என்பது நூலின் சிறப்பை உணர்த்த வந்த அடைமொழி 
  • சதகம் என்பது, நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

No comments:

Post a Comment