அன்பானவர்களே!
கடந்த பதிவல் வெற்றியை மாத்திரம் எதிர்பாருங்கள் என்று எழுதியிருந்தேன். ஆம் வெற்றியை மாத்திரமே எதிர்பாருங்கள்.
தோல்வி குறித்த எண்ணம் எப்பொதுமே வராது இருக்கப் போவதே இல்லை. அது வரும். நாம் பயப்படுவோம். சோர்ந்துபோவோம். அல்லது நாம் பயப்படாவிட்டாலும் வேறு யாரேனும் நம்மை பயப்படச் செய்வார்கள்.
உங்கள் நண்பர்கள், உங்கள் உறவினர்கள், அல்லது நீங்கள் பெருமதிப்பும் பேரன்பும் வைத்திருக்கும் யாரேனும் ஒருவர் கூட இந்த காரியத்தை செய்யலாம்.
எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருங்கள். உங்களுக்குள்ளாக நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதையும் கவனித்துப் பாருங்கள்.
அரசு தேர்வில் வெற்றிப் பெற முடியாது என்ற எண்ணம் வரும் போதெல்லாம் அதை மாற்றிப் பழகுங்கள்.
என்னால் இந்த தேர்வில் வெற்றிப் பெற முடியும்.
சமீபத்தில் என் மகள் என்னிடம் கூறினாள் அம்மா உங்களுக்கு என்று சக்தி எதுவும் இல்லை.
ஒரு தனி சிறப்பு மிக்க, இந்த பிரபஞ்சத்தை இயக்கக் கூடிய சக்தி எதுவும் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம். நம்மை இயக்கக் கூடிய சக்தி நம்மிடம் இருக்கிறது.
அது என்ன வென்றால் எண்ணம்.
நீங்கள் எதை நினைத்தாலும் அது சரியே..
நீங்கள் உங்களால் முடியாது என்று நினைத்தால் உங்களால் முடியாது தான்.
உங்களால் முடியும் என்று நினைத்தால், உங்களால் முடியும் தான்.
முடியாது என்று எண்ணும் போது... சோர்ந்து போய் செயல்படாமல் இருப்பீர்கள்.
முடியும் என்று எண்ணும் போது, செயல்பட துவங்குவீர்கள்.
தொடர்ந்து ஒரு காரியத்தில் செயல்படுதல் நிச்சயம் வெற்றி தரும்.
முடியும் என்று எண்ணிப்பழகுங்கள்
பிறகு எப்படி முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படத் துவங்குங்கள்.
உங்கள் எண்ணம்
நீங்கள் உங்களுக்குள்ளாக பேசிக்கொள்ளும் பேச்சு
பிறகு நீங்கள் செயல் இவை மூன்றும் உங்களின் திட்டமிடல் பற்றியே இருக்கட்டும்.

No comments:
Post a Comment