Wednesday, 30 January 2019

உங்களால் வெல்ல முடியும்.


நீங்கள் வெல்ல முடியும் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களால் வெல்ல முடியும்; வெற்றிக்கு அவசியம் நம்பிக்கையே.

                                  -   வில்லியம் ஹாஸ்லிட் 

நம்ம பாதிக்கிற முதல் விஷயமே, நம்ம சுத்தி இருக்கறவங்களோட பேச்சுதான். ஒன்னு அவங்க நம்ம மனசுல நம்பிக்கையை விதைப்பாங்க.. இல்லென்னா அவநம்பிக்கையை விதைப்பாங்க..


யார் என்ன சொன்னாலும், நமக்கு என்ன செய்யனும்ன்னு தோணுதோ அதை செஞ்சட்டே இருக்கனும்.

நீங்க அரசு வேலை தான்னு முடிவெடுத்துட்டா...

உங்களால முடியுங்கறத மட்டும் மனசுல வச்சுட்டு, எப்படி செஞ்சா படிச்சு முடிச்சுடலாம்ன்னு யோசிச்சு, அதுக்கா ஒரு திட்டம் வச்சு படிக்க ஆரம்பிச்சுட வேண்டியது தான்.

நீங்க ஒரே வருஷத்துல படிச்சுட முடியும்னாலும் முடியும் தான்.. படிக்கிறதுக்கான நேரத்தை அதிகப்படுத்திக்கறதும்,  கவனத்தை ஒன்று குவிப்பதும் மாத்திரம் தான் விஷயம்.

உங்க மனசுல அவ நம்பிக்கை தோணும் போது... சத்தமா உங்க கூட நீங்களே பேச ஆரம்பிங்க...

என்னால முடியும், நான் இந்த பாடத்தை விருப்பத்தோட படிக்குறேன்.. எனக்கு இந்த பாடம் பிடிச்சிருக்கு.. இப்படி

உங்க கூட நீங்களே பேசும் போது, உங்கள் எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும், உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்கள் துவங்கும், தொடர்ந்து செயல்பட வெற்றி உங்களை சரணடையும். நீங்களும் அரசு வேலை, அரசு அதிகாரி இலட்சியத்தில் வெற்றி பெற்றுவிடலாம்.

ஆல்த பெஸ்ட்

நீங்களும் வெற்றியடையபோகிறீர்கள்... உங்களோடு சேர்ந்து நானும் வெற்றி அடைய போகிறேன்.


No comments:

Post a Comment