தேதி: 20.04.2024
நேரம் : 7.36
13.07.2024
எக்சாம் தேதிய கொட்டை எழுத்துல டைப் பண்ணிட்டேன். தேதி மறந்து போகக் கூடாதில்ல.
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா?
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா - பாடல் ஒரு பக்கம் youtube - ல ஓடிட்டு இருக்கு.
எலலாருக்கும் காதல் அவசியம், நட்பு அத்தியாவசியம்.
எனக்குள்ளயும் அந்த தேடல் இருக்கே..
உங்களுக்கும் இந்த காரணங்களால மனசு அலைப்பாயும் தானே.. பாயாம இருந்தா சரி. என்னை மாதிரி அலைஞ்சா..
எப்படியாச்சும் ஒரு முறையாச்சும், பேசிடனும், அந்த குரலை கேட்டுடனும். ஒரு மெசெஜ் ஆச்சும் வந்துடனும்ன்னு மனசு அங்கயே ஓடி படிக்காம விட்டுட்டா….
ஒரு ரெண்டு நிமிஷம் அவங்கள்ட்ட பேசிடுங்க, ரொம்ப லவ்சா நச்சரிக்கற ஆளா இருந்தா, உங்க வாழ்க்கைக்கு இந்த வேலை எவ்ளோ முக்கியம்ன்னு சொல்லி புரிய வைங்க..
என் தரப்புல, நான் தான் நச்சரிப்பு, என் மனசு தான் தனிமைக்குள்ள தொலைஞ்சு, இப்ப தான் என்னை நானே மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு, என் ரோல் மாடல் மாத்திரம் தான்…. பேசனும்ன்னு நினைப்பேன். ஏன்னா எனக்கும் அவங்களுக்கும் என்ன Feel என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால தான் அந்த புகைப்படத்தை எடுத்து Word File - ல பேஸ்ட் பண்ணிக்கிட்டேன்.
காலை எந்திரிச்சு, அந்த முகத்தை பார்த்து, நீ ஜெயிச்சுட்ட, உன் பாதையில முன்னாடி போய்ட்ட, நான் இங்கயே நிக்குறேன். ப்ளீஸ் உன்னோட அந்த ஒருமுகத் திறனை எனக்கு கொஞ்சம் கொடு. என் மனசு சலனப்படாம, என் குறிக்கோளை அடைய உதவி செய்யனும்ன்னு பேசிக்கிட்டேன். ஒரு விதத்துல நான் அந்த நிழற் படத்தை பார்த்து பேசினாலும், என்கிட்டயே பேசிக்கிறது தான்.
அந்த முகம், அந்த சிரிப்பு, எப்பவும் வேறொரு களத்துக்கு, அடுத்த கட்டத்திற்கு நகர்த்த ஆரம்பிச்சது.
சத்தியமா நான் இப்படி நினைக்கறது, அவங்களுக்கு தெரியாது.
அதனால நான் இங்க போட்டோ, பதிவிடல.
மனதை மடை மாற்ற இதை தவிர வேற உத்தி எனக்கு தெரியல. யார் பக்கத்துல இருந்தா பெட்டரா பீல் பண்றோமோ அவங்க கூட பயணிக்கறது தான் என்னை பொறுத்த வரைக்கும், நாம சரியான பாதையில பயணிக்க உதவி செய்யும். முதல் முறை பார்த்ததும் சந்தோஷப்பட்டேனோ அவங்க முகம், அவங்க அருகாமை எனக்கு தேடலா இருந்தது,
கடவுள் படைப்பில் முகம் அற்புதமா செயல். ஒரு சிலர் முகங்களை கிறுக்கி பதிவிடும்போது அது பெரும் வேதனையைத் தரக் கூடியதாக இருக்கும். சரி…
நமக்கு வரக்கூடிய அடுத்த தடங்கல், காதல், நட்பு….
எப்படி அணுகனுங்கறத முடிவு பண்ணிக்கங்க.
தொடரும்…
No comments:
Post a Comment