Saturday, 20 April 2024

ஞானும் என்ட TNPSC யும் - 3

21.04.2024

8.57 AM



கட்டு கட்டு கீர கட்டு, புட்டு புட்டு சுரா புட்டுன்னு எங்க ஊர் மாரியம்மன் கோவில்ல பாட்டு செம கிக்கா  பாடிட்டு இருக்கு. என் மனசும் பாட்டுக்கு ஏத்தமாதிரி தாளம் போட ஆரம்பிச்சுட்டு. சரி இப்படி போனா எப்படி படிக்கறது. நான் அந்த பாட்டோட ராகத்துக் கேத்தமாதிரி நான் படிச்சுட்டு இருந்த வரிகளை மாத்த ஆரம்பிச்சேன்.


இந்த அனுபவம் எனக்கு பிடிச்சிருந்தது. Feel Good.


இன்னைக்கு என் ப்ரண்ட் ரெண்டு பேருக்கு Birth day. நான் வாழ்த்திட்டேன். நீங்களும் வாழ்த்திடுங்க. வாழத்து சொல்லுதல் நல்ல பழக்கமாம்.


கோவில்கள் ல இந்த மாதிரி பாடல்கள் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. இதே போல பாஸ் பீட் சாங்குகளில் நல்ல பொருள் பதிந்த பாடல்களை போடலாம்.  எத்தனையோ பக்தி பாடல்கள் இருக்கிறது. 


அடுத்து 


Youtube - ல் நேரத்தை வீணடிக்காதீர்கள். காலைல நான் youtube போனதும், இப்படி… ஸ்க்ரோல் பண்ணேனா… ஒரு மணி நேரத்தை வீணடிச்சிருக்கேன். கலவியா? களவியா? டவுட் வேற. திருக்குறள் பார்த்ததின் எபெக்ட்.


நம்மை அறியாமல் நாம் அடிமைகளாகிறோம். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் நேரத்தை திருடும் மற்ற விஷயங்களையும் கண்டு பிடியுங்கள்.


உங்களோடு நீங்களே பேசுவது அதிக முக்கியம். உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.


நெஞ்சம் ஒரு முறை நீ என்றது

கண்கள் ஒரு முறை பார் என்றது….


சிம்பன்சி இனத்தின் மரபணுவை (DNA) எடுத்து ஆய்வு செய்ததில் அதன் பண்புகள் மனித இனத்துடன் 98 % ஒத்து உள்ளதாம்.


இதை எப்படி மேல் உள்ள வரிகளின் ராகத்திற்கு கடத்துவீர்கள். பாடி பாருங்கள் அந்த உணர்வு அற்புதமாக இருக்கும்.


அடுத்து


நீங்கள் வாசித்ததை எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டும் அதை குறித்து சிந்தனை செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் அசைபோட வேண்டும். அப்பொழுது மறக்காது.


அசை போடுதல் நினைவுத் திறனை அதிகரிக்கும். இதை எனக்கு கவலைகள் கற்றுக்கொடுத்தது. இந்த யுக்தியை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.





இது N. சொக்கன் அவரோட வாட்சப் பேஜ்ல பதிவிட்டிருந்தார். உண்மைன்னு தோணுச்சு. எனக்கும் சேர்தது தான்.. இது.


படிக்கும் போது படிச்சுடனும், அப்போ தேவையில்லாத ஆணி பிடுங்கிட்டு இருந்தா, என்னை மாதிரி 46 ல உங்க கூட கதை பேசிட்டு இருக்க வேண்டியது தான். 


எங்க..


எல்லாரும் படிக்க ஒடிட்டிங்களா?


Good…


நல்ல பிள்ளைங்க..


All the best


EXAM DATE

13.07.2024


No comments:

Post a Comment