எல்லாரும் எப்படி இருக்கீங்க
படிச்சீங்களா?
நான் படிக்கல...
மனசு முழுக்க கஷ்டம் கவலைகள். இதை எப்படி மேற்கொள்வது...
நீீங்க சொல்றது காதுல விழுது...
கவலை என்னைக்குத்தான் இல்ல.. அதான.
உங்களுக்கு இந்த வேலை எந்த அளவுக்கு முக்கியம்ன்னு உங்க மனசுக்கு புரியவச்சுடுங்க, அப்போ நீங்க படிக்க உங்க மனசே ஒத்துழைக்கும்.
எல்லாரும் சொல்ற அட்வைஸ் தான். எப்படி சாத்தியமாக்குவது?
எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்.
1. நான் கையில எடுத்திருக்க நாய்களுக்கான வீட்டை கட்டிமுடிக்க வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கு உணவளித்தல், இன்னும் தமிழகம் முழுமைக்கும் உள்ள நாய்களுக்கு உதவுதல் காப்பகம் அமைத்தல் போன்ற லட்சிய கனவுகள் மனது நிறைந்திருக்கிறது. லச்சு இறந்து போனது, ஸ்கூபியை இழந்தது, லொடுக்குவின் இறப்பு , இப்படி என் பணத் தேவைகளை கண்முன் நிறுத்துகிறது. பிறரிடம் நாய்களுக்காக உதவி கேட்பது அவ்வளவு இலகுவாக இல்லை. நான் சம்பாதிப்பது தான் என் சுயத்தை இந்த கவலைகளில் இருந்து விடுவிக்கும்.
2. என் மகளின் திருமணம். அடுத்த வருடம் முடித்துவிடவேண்டும். இதை இரண்டாவதாக வைக்கவில்லை. அவள் திருமணம் நான் வேலைக்கு போனாலும், போகாவிட்டாலும் நடக்கும். நான் வேலைக்கு போய்விட்டால் இன்னும் சிறப்பாக வழி பிறக்கும்.
3. திவ்யா, திவ்யாவின் படிப்பு....
4. எங்கம்மாவோட பணத் தேவைகளை கொஞ்சமாச்சும் பூர்த்தி செய்யனும், அவங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் தரணும்.
நான் இன்னும் முன்னமே இந்த வேலைக்கான முயற்சியை எடுத்து என்னிடம் பணம் இருந்திருந்தால் நாய்களில் சிலரை நான் இழந்திருக்கமாட்டேனோ என்று தோன்றும்.
உங்களுக்கு மனமிருந்தால் என்னோடு சேர்ந்து செயலாற்றுங்கள். நாய்களுக்கு உதவி செய்யுங்கள். இது கட்டாயமில்லை. நிர்பந்தமுமில்லை. உங்கள் தெரு, உங்கள் ஊர் நாய்களுக்கு உணவும், நீரும் இருப்பிடமும் தாருங்கள். சக ஜீவர்களை நேசியுங்கள்.
எதிர்பாராமல் நம் வாழ்க்கையில் வரும் சிக்கல்கள் நம் மனபலத்தை திருடிக்கொள்ளும்.
இந்த இடத்தில் தான் கடவுள் தேவையாக இருப்பார்.
அல்லது.. .
உங்கள் மனதில் நீங்கள் பிரமாண்டமாக எண்ணும் ஏதேனும் ஒரு நபர்.
அவர் பிரமாண்டம் இல்லை என்று உங்கள் மனது லேசாக அவநம்பிக்கை கொண்டாலும், நீங்கள் தடுமாறுவீர்கள்.
உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தியுங்கள்
உங்கள் சூழலை பார்க்காமல், தெய்வத்தை மாத்திரம் பாருங்கள்.
காலத்தை விரயமாக்காமல் படிக்கத் துவங்குங்கள்.
No comments:
Post a Comment