Friday, 26 April 2024

ஞானும் என்ட TNPSC யும் - 4

 எல்லாரும் எப்படி இருக்கீங்க


படிச்சீங்களா?



நான் படிக்கல...


மனசு முழுக்க கஷ்டம் கவலைகள். இதை எப்படி மேற்கொள்வது...


நீீங்க சொல்றது காதுல  விழுது...


கவலை என்னைக்குத்தான் இல்ல.. அதான.


உங்களுக்கு இந்த வேலை எந்த அளவுக்கு முக்கியம்ன்னு உங்க மனசுக்கு புரியவச்சுடுங்க, அப்போ நீங்க படிக்க உங்க மனசே ஒத்துழைக்கும். 


எல்லாரும் சொல்ற அட்வைஸ் தான். எப்படி சாத்தியமாக்குவது?


எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்.


1. நான் கையில எடுத்திருக்க நாய்களுக்கான வீட்டை கட்டிமுடிக்க வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கு உணவளித்தல், இன்னும் தமிழகம் முழுமைக்கும் உள்ள நாய்களுக்கு உதவுதல் காப்பகம் அமைத்தல் போன்ற லட்சிய கனவுகள் மனது நிறைந்திருக்கிறது. லச்சு இறந்து போனது, ஸ்கூபியை இழந்தது, லொடுக்குவின் இறப்பு , இப்படி என் பணத் தேவைகளை கண்முன் நிறுத்துகிறது. பிறரிடம் நாய்களுக்காக உதவி கேட்பது அவ்வளவு இலகுவாக இல்லை. நான் சம்பாதிப்பது தான் என் சுயத்தை இந்த கவலைகளில் இருந்து விடுவிக்கும்.


2. என் மகளின் திருமணம். அடுத்த வருடம் முடித்துவிடவேண்டும். இதை இரண்டாவதாக வைக்கவில்லை. அவள் திருமணம் நான் வேலைக்கு போனாலும்,  போகாவிட்டாலும் நடக்கும். நான் வேலைக்கு போய்விட்டால் இன்னும் சிறப்பாக வழி பிறக்கும்.


3. திவ்யா, திவ்யாவின் படிப்பு....

4. எங்கம்மாவோட பணத் தேவைகளை கொஞ்சமாச்சும் பூர்த்தி செய்யனும், அவங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் தரணும்.


நான் இன்னும் முன்னமே இந்த வேலைக்கான முயற்சியை எடுத்து என்னிடம் பணம் இருந்திருந்தால் நாய்களில் சிலரை  நான் இழந்திருக்கமாட்டேனோ என்று தோன்றும்.


உங்களுக்கு மனமிருந்தால் என்னோடு சேர்ந்து செயலாற்றுங்கள். நாய்களுக்கு உதவி செய்யுங்கள். இது கட்டாயமில்லை. நிர்பந்தமுமில்லை. உங்கள் தெரு, உங்கள் ஊர் நாய்களுக்கு உணவும், நீரும் இருப்பிடமும் தாருங்கள். சக ஜீவர்களை நேசியுங்கள்.


எதிர்பாராமல் நம் வாழ்க்கையில் வரும் சிக்கல்கள் நம் மனபலத்தை திருடிக்கொள்ளும்.


இந்த இடத்தில் தான் கடவுள் தேவையாக இருப்பார்.


அல்லது.. .


உங்கள் மனதில் நீங்கள் பிரமாண்டமாக எண்ணும் ஏதேனும் ஒரு நபர்.


அவர் பிரமாண்டம் இல்லை என்று உங்கள் மனது லேசாக அவநம்பிக்கை கொண்டாலும், நீங்கள் தடுமாறுவீர்கள்.


உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தியுங்கள்


உங்கள் சூழலை  பார்க்காமல், தெய்வத்தை மாத்திரம் பாருங்கள்.


காலத்தை விரயமாக்காமல் படிக்கத் துவங்குங்கள்.



Saturday, 20 April 2024

ஞானும் என்ட TNPSC யும் - 3

21.04.2024

8.57 AM



கட்டு கட்டு கீர கட்டு, புட்டு புட்டு சுரா புட்டுன்னு எங்க ஊர் மாரியம்மன் கோவில்ல பாட்டு செம கிக்கா  பாடிட்டு இருக்கு. என் மனசும் பாட்டுக்கு ஏத்தமாதிரி தாளம் போட ஆரம்பிச்சுட்டு. சரி இப்படி போனா எப்படி படிக்கறது. நான் அந்த பாட்டோட ராகத்துக் கேத்தமாதிரி நான் படிச்சுட்டு இருந்த வரிகளை மாத்த ஆரம்பிச்சேன்.


இந்த அனுபவம் எனக்கு பிடிச்சிருந்தது. Feel Good.


இன்னைக்கு என் ப்ரண்ட் ரெண்டு பேருக்கு Birth day. நான் வாழ்த்திட்டேன். நீங்களும் வாழ்த்திடுங்க. வாழத்து சொல்லுதல் நல்ல பழக்கமாம்.


கோவில்கள் ல இந்த மாதிரி பாடல்கள் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. இதே போல பாஸ் பீட் சாங்குகளில் நல்ல பொருள் பதிந்த பாடல்களை போடலாம்.  எத்தனையோ பக்தி பாடல்கள் இருக்கிறது. 


அடுத்து 


Youtube - ல் நேரத்தை வீணடிக்காதீர்கள். காலைல நான் youtube போனதும், இப்படி… ஸ்க்ரோல் பண்ணேனா… ஒரு மணி நேரத்தை வீணடிச்சிருக்கேன். கலவியா? களவியா? டவுட் வேற. திருக்குறள் பார்த்ததின் எபெக்ட்.


நம்மை அறியாமல் நாம் அடிமைகளாகிறோம். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் நேரத்தை திருடும் மற்ற விஷயங்களையும் கண்டு பிடியுங்கள்.


உங்களோடு நீங்களே பேசுவது அதிக முக்கியம். உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.


நெஞ்சம் ஒரு முறை நீ என்றது

கண்கள் ஒரு முறை பார் என்றது….


சிம்பன்சி இனத்தின் மரபணுவை (DNA) எடுத்து ஆய்வு செய்ததில் அதன் பண்புகள் மனித இனத்துடன் 98 % ஒத்து உள்ளதாம்.


இதை எப்படி மேல் உள்ள வரிகளின் ராகத்திற்கு கடத்துவீர்கள். பாடி பாருங்கள் அந்த உணர்வு அற்புதமாக இருக்கும்.


அடுத்து


நீங்கள் வாசித்ததை எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டும் அதை குறித்து சிந்தனை செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் அசைபோட வேண்டும். அப்பொழுது மறக்காது.


அசை போடுதல் நினைவுத் திறனை அதிகரிக்கும். இதை எனக்கு கவலைகள் கற்றுக்கொடுத்தது. இந்த யுக்தியை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.





இது N. சொக்கன் அவரோட வாட்சப் பேஜ்ல பதிவிட்டிருந்தார். உண்மைன்னு தோணுச்சு. எனக்கும் சேர்தது தான்.. இது.


படிக்கும் போது படிச்சுடனும், அப்போ தேவையில்லாத ஆணி பிடுங்கிட்டு இருந்தா, என்னை மாதிரி 46 ல உங்க கூட கதை பேசிட்டு இருக்க வேண்டியது தான். 


எங்க..


எல்லாரும் படிக்க ஒடிட்டிங்களா?


Good…


நல்ல பிள்ளைங்க..


All the best


EXAM DATE

13.07.2024


ஞானும் என்ட TNPSC யும் - 2

தேதி: 20.04.2024

நேரம் : 7.36



13.07.2024


எக்சாம்  தேதிய கொட்டை எழுத்துல டைப் பண்ணிட்டேன்.  தேதி மறந்து போகக் கூடாதில்ல.


இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்

மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா?

இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்

விடியலை காணவும் விதி இல்லையா - பாடல் ஒரு பக்கம் youtube - ல ஓடிட்டு இருக்கு.


எலலாருக்கும் காதல் அவசியம், நட்பு அத்தியாவசியம்.


எனக்குள்ளயும் அந்த  தேடல் இருக்கே.. 


உங்களுக்கும் இந்த காரணங்களால மனசு அலைப்பாயும் தானே.. பாயாம இருந்தா சரி. என்னை மாதிரி அலைஞ்சா.. 


எப்படியாச்சும் ஒரு முறையாச்சும், பேசிடனும், அந்த குரலை கேட்டுடனும். ஒரு மெசெஜ் ஆச்சும் வந்துடனும்ன்னு மனசு அங்கயே ஓடி படிக்காம விட்டுட்டா….


ஒரு ரெண்டு நிமிஷம் அவங்கள்ட்ட பேசிடுங்க,  ரொம்ப லவ்சா நச்சரிக்கற ஆளா இருந்தா, உங்க வாழ்க்கைக்கு இந்த வேலை எவ்ளோ முக்கியம்ன்னு சொல்லி புரிய வைங்க..


என் தரப்புல, நான் தான் நச்சரிப்பு, என் மனசு தான் தனிமைக்குள்ள தொலைஞ்சு, இப்ப தான் என்னை நானே மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு, என் ரோல் மாடல் மாத்திரம் தான்…. பேசனும்ன்னு நினைப்பேன்.  ஏன்னா எனக்கும் அவங்களுக்கும் என்ன Feel என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால தான் அந்த புகைப்படத்தை எடுத்து Word File - ல பேஸ்ட் பண்ணிக்கிட்டேன்.


காலை எந்திரிச்சு, அந்த முகத்தை பார்த்து, நீ ஜெயிச்சுட்ட, உன் பாதையில முன்னாடி போய்ட்ட, நான் இங்கயே நிக்குறேன். ப்ளீஸ் உன்னோட அந்த ஒருமுகத் திறனை எனக்கு கொஞ்சம் கொடு. என் மனசு சலனப்படாம, என் குறிக்கோளை அடைய உதவி செய்யனும்ன்னு பேசிக்கிட்டேன். ஒரு விதத்துல  நான் அந்த நிழற் படத்தை பார்த்து பேசினாலும், என்கிட்டயே பேசிக்கிறது தான்.


அந்த முகம், அந்த சிரிப்பு, எப்பவும் வேறொரு களத்துக்கு, அடுத்த கட்டத்திற்கு நகர்த்த ஆரம்பிச்சது.


சத்தியமா நான் இப்படி நினைக்கறது, அவங்களுக்கு தெரியாது. 


அதனால நான் இங்க போட்டோ, பதிவிடல.


மனதை மடை மாற்ற இதை தவிர வேற உத்தி எனக்கு தெரியல. யார் பக்கத்துல இருந்தா பெட்டரா பீல் பண்றோமோ அவங்க கூட  பயணிக்கறது தான் என்னை பொறுத்த வரைக்கும், நாம சரியான பாதையில பயணிக்க உதவி செய்யும்.  முதல் முறை பார்த்ததும் சந்தோஷப்பட்டேனோ அவங்க முகம், அவங்க அருகாமை எனக்கு  தேடலா இருந்தது, 


கடவுள் படைப்பில் முகம் அற்புதமா செயல். ஒரு சிலர் முகங்களை கிறுக்கி பதிவிடும்போது அது பெரும் வேதனையைத் தரக் கூடியதாக இருக்கும். சரி…


நமக்கு வரக்கூடிய அடுத்த தடங்கல், காதல், நட்பு….


எப்படி அணுகனுங்கறத முடிவு பண்ணிக்கங்க.



தொடரும்…


Friday, 19 April 2024

ஞானும் என்ட TNPSC யும் -1

19.04.2024

7.02 PM


அன்புள்ள உங்களுக்கு,


இன்னைக்கு நான் குரூப் 1 விண்ணப்பிச்சுட்டேன். அடுத்து படிக்க ஆரம்பிச்சுட்டேன். அதற்கு முன்னாடி ரெண்டு வீடியோ பார்த்தேன். அதோட இணைப்பை இங்க தரேன். அது   உங்களுக்கு ஒரு முன் மாதிரியா இருக்கும்.


அடுத்து எல்லாரும் சாமி படம் வச்சுப்பாங்க. நான் எனக்கு பிடிச்ச ஒரு நபரோட படத்தை நான் டைப்பண்ணிட்டு இருக்குற   இந்த Word Doc ல பேஸ்ட் பண்ணிக்கிட்டேன். ஏன்னா அவர் எனக்கு ரோல் மாடல். அவர் வேற டிப்பார்ட்மெண்ட். இருந்தாலும் இந்த பைத்தியக்காரத் தனம் எனக்கு தேவையா இருக்கு. உங்களுக்கு சாமி தேவையா இருந்தா உங்களுக்கு பிடிச்ச சாமிய வேண்டிக்கிட்டு படிக்க துவங்கிடுங்க.


நான் பர்ஸ்ட் பார்த்த வீடியோ


https://www.youtube.com/watch?si=1DRo-aL-eaMdPLw2&v=mPOfGNbNuyQ&feature=youtu.be


இரண்டாவது பார்த்த வீடியோ


https://www.youtube.com/watch?v=G5JrfVu0nPQ


இந்த வீடியோ உங்களுக்கு உதவியா இருக்கும்ன்னு நம்பறேன்.



அடுத்து நான் எக்சாம் தேதியை கொட்டை எழுத்துல எழுதிக்கிட்டேன்


13.07.2024



அடுத்து நான் சிலபஸ் டைப் பண்ணிக்கிட்டேன். எனக்கு டைப் பண்ணி வாசிக்கும் போது மறக்காது. அடுத்து உரை நடையில இருக்கறத பேச்சு தமிழுக்கு மாத்தி வாசிச்சா ஈசியா மனசுல பதியும். அதனால நான் எப்பவும் டைப் பண்ணிடறது வழக்கம்.


உங்களுக்கு எப்படி வாசிச்சா பிடிக்குமோ அப்படி வாசிச்சுக்கோங்க.


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I


தொகுதி - I பணிகள்


பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)

(முதல் நிலைத் தேர்வு)

கொள்குறி வகைகளுக்கான தலைப்புகள்

Code No: 003


அலகு - I: பொது அறிவியல்


(i) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு - பகுத்தறிதல் - பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.


(ii) பேரண்டத்தின் இயல்பு - பொது அறிவியல் விதிகள் - இயக்கவியல் பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம், மற்றும் ஆற்றல் அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம். அணுக்கரு இயற்பியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்.


(iii) தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள்.

(iv) உயிரியலின் முக்கியகோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.

(v) சுற்றுப்புறச் சூழல் மற்றும் சூழலியல்.


அலகு - II: நடப்பு நிகழ்வுகள்


(i) வரலாறு - அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு - தேசியச் சின்னங்கள் - மாநிலங்கள் குறித்த விவரங்கள் - செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் - விளையாட்டு - நூல்களும் ஆசிரியர்களும்.

(ii) ஆட்சியியல் - இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும பொது விழிப்புணர்வும் (Public Awareness) பொது நிர்வாகமும் - நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடுகளும், பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள்.

(iii) புவியியல் - புவியியல் அடையாளங்கள்.

(iv) பொருளாதாரம் - தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள்.

(v) அறிவியல் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்.

(vi) கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய வெவ்வேறு துறைகளில் தனித்துவம் கொண்ட ஆளுமைகள்.


அலகு - III:  இந்தியாவின் புவியியல்


(i) அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை - நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் - மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள்.

(ii) போக்குவரத்து - தகவல் தொடர்பு.

(iii) சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் - இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்.

(iv) இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை - சுற்றுச் சூழல் மாசுபடுதல்; காரணங்களும் தடுப்பு முறைகளும்  - பருவநிலை மாற்றம் - பசுமை ஆற்றல்.


அலகு - IV: இந்தியாவின் வரலாறும் பண்பாடும்.


(i) சிந்து சமவெளி நாகரிகம் - குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் - விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் - தென்  இந்திய வரலாறு.

(ii) இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்.

(iii) இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை - இனம், மொழி, வழக்காறு.

(iv) இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்.


அலகு - V:  இந்திய ஆட்சியியல்


(i) இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை - அரசியலமைப்பின் முக்கிய  கூறுகள் - ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.


(ii) குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.


(iii) ஒன்றியம் நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் - மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் - உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்


(iv) கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள் : மத்திய - மாநில உறவுகள்.

(v) தேர்தல் - இந்திய நீதி அமைப்புகள் - சட்டத்தின் ஆட்சி.

(vi) பொதுவாழ்வில் ஊழல் - ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் - லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா - தகவல் உரிமை - பெண்களுக்காக அதிகாரமளித்தல் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் - மனித உரிமைகள் சாசனம்.


அலகு - VI: இந்தியப் பொருளாதாரம்


(i) இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் - ஒரு மதிப்பீடு - திட்டக்குழு மற்றும்  நிதி ஆயோக்.


(ii) வருவாய் ஆதாரங்கள் - இந்திய ரிசர்வ் வங்கி - நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை - நிதி ஆணையம் - மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு - சரக்கு மற்றும் சேவை வரி.

(iii) இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு - தொழில் வளர்ச்சி - ஊரக நலன்சார் திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை.


அலகு - VII: இந்திய தேசிய இயக்கம்


(i) தேசிய மறுமலர்ச்சி - ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் - இந்திய தேசிய காங்கிரஸ் - தலைவைர்கள் உருவாதல் - பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், ஜவகர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பலர், 



(ii) விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் மற்றும் புரட்சிகர இயக்கங்கள்.


(iii) வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவனை.



அலகு - VIII :  தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்


(i) தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.

(ii) திருக்குறள்:


அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்

ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை

இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்

ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை

உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு

ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்


(iii) விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் - விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.


(iv) பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக - அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி - நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்ளுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.


அலகு - IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்


(i) தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.

(ii) அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் - இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் - தமிழகத்தின் பொருளாதார போக்குகள் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.


(iii) சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.

(iv) தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்.

(v) தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.

(vi) பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்.

(vii) தமிழகத்தில் மின்னாளுகை


அலகு - X: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)


(I) சுருக்குதல் - விழுக்காடு - மீப்பெறு பொதுக் காரணி (HCF) - மீச்சிறு பொது மடங்கு (LCM).

(ii) விகிதம் மற்றும் விகிதாச்சாரம்

(iii) தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளளவு - காலம் மற்றும் வேலை.

(iv) தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக் காரணவியல் - எண் எழுத்துக் காரணவியல் - எண் வரிசை.


—---------------------------------

 இந்த கோப்பினை பாதியில் டைப் செய்யாமல் விட்டு விட்டேன். உங்க ஊர்ல, லோ ஓல்டேஜ்.


அந்த சமயத்துல  வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிச்சுட்டேன்.


அலகு - VII: இந்திய தேசிய இயக்கம்



TNPSC ACADEMY - ல 10 புத்தகங்கள் வாங்கினேன்.  அதில் 3 புத்தகங்களை எலி தன் குழந்தைகளுக்கு கிழித்துக்கொண்டு போனது போக மீதம் உள்ளது. 


எலியின் இருப்பிடத்தில் என் தாயார் எனக்காக  வீட்டைக் கட்டி விட்டதால், எலியிடம் மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு வழியில்லாமல், மொழி தெரியாத எலியிடம் மன்னிப்பை கோரி மானசீகமாக மன்னிப்பை பெற்று மீதமுள்ள பக்கங்களை எடுத்து வைத்துள்ளேன். வாசிக்க அவைகளும் வேண்டும் தானே.



தொடரும்….


அன்புள்ள உங்களுக்கு

 எல்லாரும் எப்படி இருக்கீங்க?...நல்லா படிக்கிறீங்களா? இல்ல என்னடா இது.. படிப்பு படிப்புன்னு வாழ்க்கை ஒரே போறிங்கா போகுதேன்னு லட்சியத்தை விட்டுட்டீங்களா?


நான் திரும்பவும் படிக்க ஆரம்பிச்சுட்டேன்.


வயசு போச்சுடா.. முடிஞ்சது கட்டம்ன்னு நினைச்சேன். இன்னும் வயசு இருக்காம். சரி நான் படிக்க போறேன். நீங்களும் படிங்க.


இன்னைக்குதான் Group 1 தேர்விற்கு விண்ணப்பித்தேன். 


தேர்வு எழுத போகும் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.



நட்புடன்

தமிழ்ச்செல்வி ஜி.ஜே

Tuesday, 1 October 2019

புதிய பாடத்திட்டம் குரூப் 2 & குரூப் 2A (ஆங்கிலம் மற்றும் தமிழில்.

group 2 & 2 A Syllubus (Tamil & English pdf)

RACE Coaching Institute - புதிய பாடத்திடம் பற்றிய ஒரு யுட்யுப் பதிவு போட்டிருந்தாங்க, உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்ன்னு நம்பறேன்.

அதோ இணைப்பையும் உங்களுக்கு கீழ தரேன்.

RACE Coaching Institute

முயற்சி என்பது சொல் அல்ல செயல்

முயற்சி என்பது சொல் அல்ல செயல்...

இந்த வாக்கியத்தை படிச்சதுமே புரிஞ்சுட்டு இருக்கும்,  அது என்னன்னா, நான் அரசு அதிகாரியா ஆயிடுவேன்னு சொல்லிட்டு இருக்கறது முயற்சி இல்ல, அரசு அதிகாரியா ஆகுறதுக்கு செயல் படனும்.

நான் அரசு அதிகாரியா ஆகுறேன்னு சொல்லிட்டு, ஆர் ஓ மெஷின் விக்குறதுல முனைப்பா இருந்தீங்கன்னா நீங்க தொழில் அதிபராத்தான் ஆக முடியும்.

எந்த ஒரு விஷயத்துக்குமே அதற்கு உண்டான நேரத்தை கொடுக்கனும் அது ரொம்ப முக்கியம்.

அதை விட முக்கியம்  உங்கள் செயல்பாடுகள் உங்கள் இலட்சியத்திற்கான பாதையை நோக்கி போகனும்.

group 2 & group 2A பாடத்திட்டம் மாத்தியிருக்காங்க

pdf அட்டாச் பண்றேன் படிங்க..

ஆல் த பெஸ்ட் எனக்கும் சேர்த்து