Tuesday, 25 June 2019

உங்களால் முடியும்!

ஒவ்வொரு உன்னதமான பணியும் முதல் யோசனையில் சாத்தியமற்றதே!

- தாமஸ் கார்லைல்


கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்னாடி நான் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துல அரசு வேலை வேணும்ன்னு மனு கொடுத்தேன். அப்போ கலெக்டரா இருந்தது திருமதி.கண்ணகி. நான் மனு கொடுத்த நேரம் அவங்க ஆபிசுக்கு வரல, அவங்களுக்கு பதிலா, பொறுப்புல வேறொருத்தர், அவர் பேர் எனக்கு நினைவு இல்ல.


கவர்ண்மென்ட் வேலைங்கறது குதிரை கொம்பு போலன்னு சொன்னார்.

அங்க இருந்தவர்கள ஒருத்தர்,  ஆபிஸ் அசிஸ்டெண்ட் போஸ்டிங்காவது போடுங்கன்னு சொன்னப்ப, இந்த பொண்ணால பைல தூக்கிட்டுப்போக முடியுமாய்யான்னு அவர பார்த்து கேட்டார்.

ஏன்னா நான் ஒரு மாற்றுத்திறனாளி... மோஸ்ட்... 70 சதவீத ஊனம்.

குடும்ப சூழல், என்னோட இயலாமை, இன்னும் எனக்கு இருந்த மன மற்றும் பண பிரச்சனைகள் இத்தனையும் கடந்து நான் அரசு அதிகாரியாக ஆசைப்படறதுக்கு நெறய வருஷங்கள் ஆகிடுச்சு,  என்ன இவங்க சொந்த கதை பேசறாங்களேன்னு நினைக்குறாங்களேன்னு நினைக்க வேணாம்...

வேலைய வாங்குறதுக்கு நம்ம மனச ஜெயிக்கிறது முக்கியமான விஷயம் .

நம்மால முடியுமா முடியாதான்னு ரெண்டு மனசா யோசிக்கிறத விட்டுட்டு..நம்மால முடியும்ன்னு நெனச்சு எந்த வழியில எப்படி முயற்சி பண்ணா முடியும்ன்னு யோசிச்சு செயல்படறது தான் வெற்றியின் வழி.

உங்களால நிச்சயமா அரசு பணியாளரா ஆக முடியும்...

உங்களால முடியும் போது என்னாலயும் முடியும்...

என்னால முடியும்ன்னா நிச்சயமா உங்களாலயும் முடியும்.


ஆல் த பெஸ்ட் எனக்கு சேர்த்தே..


No comments:

Post a Comment